உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அறநூல் தந்த அறிவாளர்


வனும் கவி பாடினால் அச்செயல் எப்படி இருக்கும்? வான் கோழி, மயில் ஆடுவதைக் கண்டு தானும் ஆடுவதை ஒக்கும்' என்று பாடலை அமைத்தார்.

'கான பயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தினும் அதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி'

அமெரிக்க நாட்டு வான்கோழி

இப்பாட்டில் கூறப்படும் வான்கோழி தமிழ்நாட்டுப் பறவையன்று; அமெரிக்க நாட்டில் வாழ்வது. இப்பறவை நானூறு ஆண்டுகட்கு முன்புதான் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப் பட்டது. ஆதலின் வான்கோழியின் இயல்பை வருணித்துப் பாடிய ஒளவையார் நானூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் அல்லர். அவர் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவரே.

சிறுவர்க்கு அறிவுரைகள்

எனவே, வான் கோழியைப் பாடிய ஔவையாரே சிறுவர்க்கு அறிவுரையாக விளங்கும் 'ஆத்திசூடி' போன்ற அறநூல்களைப் பாடினார். இவர் தாம் பாடிய நான்கு சிறு நூல்களிலும் விநாயகப் பெருமானுக்கே