பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அறநூல் தந்த அறிவாளர்


நோயைப் போக்கும் அரிய மருந்தாக விளங்தகுது நைடதம் என்னும் காவியம் ஆகும்.

தம்பியின் நூல் கண்ட தமையனார்

நைடதம் பாடிய நாவலராகிய அதிவீரராமர், அதனைத் தம் தமையனாரிடம் அனுப்பினார். அந்நாலுக்குச் சாற்றுக்கவி பெற்று தருமாறும் தூதனிடம் கூறி அனுப்பினார். வரதுங்கராமர், வானவர் தலைவனாகிய இறைவன் புகழையே பாடுபவர். மானிடர் புகழைப் பாடச் சிறிதும் மனம் விரும்பாதவர். ஆதலின்; ‘இந்நூல் எதுபற்றியது?’ என்று தூதனிடம் வினவினார். ‘மாநிலம் ஆண்ட பெருமன்னனாகிய நளனைப் பற்றிய காவியம்’ என்று சொல்லக்கேட்டார். ‘இதனை அரசியாரிடம் கொடுத்துச் சாற்றுக்கவி பெற்றுச் செல்க’ என்று கட்டவாயிட்டார். அவ்வாறே நூலைக் கொண்டுவந்த துதனும் வரதுங்கர் மனைவியிடம் கொண்டு கொடுத்தான். அரசர் விருப்பத்தையும் அறிவித்தான்.

அரசியின் அரிய கருத்து

அரசரின் விருப்பினை அறிந்த அரசி நைடத நூலை ஆர்வமுடன் வாசித்தாள். ‘இந்நூல் வேட்டை நாயின் நடையைப் போன்-