பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அறநெறி அருளிய குருபரர்

நெல்லையும் பொருகையும்

தென்பாண்டி நாட்டின் தலைநகரமாகத் திகழ்வது திருநெல்வேலி என்னும் நகரம் ஆகும். இதனை நெல்லை என்றும் சொல்லுவர். இந்நெல்லையைத் தலைநகரமாகக் கொண்டு விளங்குவது திருநெல்வேலி மாவட்டம். இம்மாவட்டத்தில் சிறந்த சிவத்தலங்களும் வைணவத் தலங்களும் உள்ளன. இதில்தான் தமிழ் முனிவன் வாழும் பொதிய மலை உள்ளது. அம்மலையிலிருந்து தோன்றிப் பெருகி வருவதே பொருநை என்னும் திருநதி ஆகும். இதனைத் தண்பொருநை என்றும், தாமிரவருணி என்றும் வழங்குவர். இந்த ஆறு, எப்போதும் தண்மை மாறாத நன்னீரை உடையது. ஆதலின் தண்பொருநை என்று பெயர் பெற்றது. இவ்வாற்று நீர் தாமிரச்சத்து உடையது. ஆதலின் தாமிரவருணி என்றும் பெயர் பெற்றது.

கைலாசமும் திருப்பதியும்

இத்தகைய தண்பொருரையாற்றின் கரையில் ஒன்பது. சிவத்தலங்கள் உள்ளன. அவற்றைப் போன்று ஒன்பது வைணவத் தலங்-