பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அறநூல் தந்த அறிவாளர்

 களும்களும் உள்ளன. அச்சிவத்தலங்கள் ஒன்பதும் ‘நவகைலாசங்கள்’ என்று போற்றப்படும். வைணவத்தலங்கள் ஒன்பதும் ‘நவதிருப்பதிகள்’ என்று போற்றப்படும். இவற்றுள் கைலாசம் ஒன்றும், திருப்பதி மூன்றும் சேர்த்து சிறந்து விளங்கும் சீவைகுண்டம் ஆகும். சீவைகுண்டத்தின் வடபகுதி கைலாயம் என்றும், தென்பகுதி வைகுந்தம் என்றும் வழங்கப்படும். இத்தலம் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும். நடுவே அமைந்துள்ளது. வைணவ அடியார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் அவதரித்த குருகூர் இத்தலத்தின் கீழ்த்திசையில் உள்ளது. இக்குருகூரை ஆழ்வார்திருநகரி என்றும் அழைப்பர்.

கோட்டைப் பிள்ளைமார்

கைலாயமும் திருப்பதியும் ஒருங்கு விளங்கும் சீவைகுண்டத்தில் சைவ வேளாளர்கள் சிறந்து வாழ்கின்றனர். கோட்டை கட்டிவாழும் பெருமை, அவ்வூர் வேளாளர்க்கு உண்டு. அவர்கள் ‘கோட்டைப் பிள்ளைமார்’ என்றே கொண்டாடப்படுவர். இன்றும் வேளாளர் வாழும் கோட்டை அவ்வூரில் உண்டு. அங்கு வாழும் பெண்கள் கோட்-