பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

63


டையுள் இருந்து வெளியே வருவது இல்லை. ஆண்கள் மட்டுமே வெளியே வந்து போவார்கள், கோட்டையைச் சேர்ந்த ஆண்மக்களையன்றிப் பிறர் உள்ளே செல்லக் கூடாது, வெளியில் இருந்து பெண்மக்கள் எவரும் உள்ளே சென்று வரலாம். இத்தகைய கட்டுப்பாடு இன்றும் இருந்து வருகிறது.

குமரகுருபரரின் பெற்றோர்

சீவைகுண்டத்தில் உள்ள கைலாசப் பகுதியில் சைவ வேளாளர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவரும் ஒருவர். அவர்தம் மனைவியார் ஆகிய சிவகாமியம்மையாருடன் இல்லறம் நடத்தி வந்தார். இவர்கள் இருவர்க்கும் பல்லாண்டுகளாகப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. அதனைப் பெருங்குறையாக எண்ணி இருவரும் வருந்தினர். ‘ஒருவன் அடைய வேண்டிய செல்வங்களில் முதன்மையானது மக்கட் செல்வம்; அதனை ஒழிந்த பிற செல்வங்களை, யாம் சிறிதும் மதிப்ப தில்லை’ என்றார் திருவள்ளுவர்.

‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற’

என்பது பொய்யா மொழி அன்றோ!