பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அறநூல் தந்த அறிவாளர்


மகப்பேறும் மனக்கவலையும்

கவிராயரும் அவர் மனைவியாரும் மகப்பேற்றின் பொருட்டுத் திருச்செந்தூர்ப் பெருமானை வழிபட்டனர். அப்பெருமானை உள் ளத்தில் நினைந்து அருந்தவங் கிடந்தனர். அத்தவத்தின் பயனாக முந்நூற்று ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் அவர்கட்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. பெற்றோர் அப்பிள்ளையைப் பெரிதும் பேணி வளர்த்தனர். அப்பிள்ளை ஐந்து ஆண்டுகள் கழிந்தும் பேசாதிருப்பதைக் கண்டு கவலை கொண்டனர். நாளடைவில் அப்பிள்ளை பேசலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர். பின்னர் அது மூங்கைப் பிள்ளை என்று எண்ணி மனம் நொந்தனர். அதனைத் திருச்செந்தூர்ப் பெருமானிடம் கொண்டுவிடக் கருதினர். அதனை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்குப் புறப்பட்டனர். அப்போது பற்பல நல்ல சகுனங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு தாயும் தந்தையும் தெளிவு அடைந்தனர்.

முருகன் அருளால் மூங்கை நீங்குதல்

செந்திலம் பதியை அடைந்த பெற்றோர் முருகப்பெருமானை வழிபட்டனர். அங்கு இலை விபூதி பெற்றுப் பிள்ளையை இறைவனிடம்