பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

67


கூறும் நூல் கந்த புராணம் எனப்படும். அது பத்தாயிரம் பாடல்களையுடைய மிகப் பெரிய நூல் ஆகும். அந்நால் கூறும் கதையினைக் கந்தர் கலிவெண்பா மிகவும் சுருக்கமாகக் கூறி விளக்குகிறது. ஆதலின் இதனைக் ‘குட்டிக் கந்த புராணம்’ என்று போற்றுவது உண்டு.

வைகுந்தத்தில் குமரகுகுருபரர்

இவ்வாறு முருகன் அருளால் வாய்திறந்து. பாடத் தொடங்கிய பிள்ளையுடன் பெற்றோர் தம் ஊரை உற்றனர். அவர் சுற்றத்தினர் எல்லோரும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். செந்தில் கந்தவேள் கருணைத்திறத்தை வியந்து பாராட்டினர். குமரகுருபரர் ஆகிய குழந்தையைக் கண்டு உள்ளத்தில் குதூகலம் கொண்டனர். அவரை வாயார வாழ்த்திப் பெருமானை வணங்கிச் சென்றனர். சிலநாட் கழித்துக் குமரகுருபரர் தாம் பிறந்த ஊரில் எழுந்தருளும் சிவபெருமான் மீது ‘கயிலைக் கலம்பகம்’ என்னும் சிறு நூலைப் பாடினர்,

குமரகுருபரர் சமய வாதம்

சில ஆண்டுகட்குப் பின் குமரகுருபரர் திருநெல்வேலியை அடைந்தார். அங்குள்ள தருமை ஆதீனத் திருமடத்தில் தங்கினார். நெல்லையிலும் அதைச் சூழ்ந்த எல்லையிலும்