பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அறநூல் தந்த அறிவாளர்


பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்

திருமலை நாயக்கர், மீனாட்சியம்மையின் திருமுன்பு நூலை அரங்கேற்றுவதற்கு வேண்டுவன செய்தார். நகரில் உள்ள புலவர்களும் கலைஞர்களும் ஒன்று கூடினர். குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் நூலை அரங்கேற்றத் தொடர்ங்கினார். அந்நூல் பத்துப் பருவங்களை உடையது, பருவத்துக்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்னும் பத்துப் பருவங்களில் ஆறாவதாக விளங்குவது வருகைப் பருவம். அப்பருவத்தின் ஒன்பதாவது பாடல் ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ என்று தொடங்குவது. அப்பாடலைக் குமரகுருபரர். இசையுடன் பாடினார். பத்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுமாறு சித்தம் உருகிப்பாடினார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்.

அங்கயற்கண்ணியின் அருள்விளையாட்டு

பத்தி வலையிற் படுபவளாகிய மீனாட்சியம்மையும் திருக்கோயில் அர்ச்சகரின் மகள் வடிவில் அங்கு ஓடோடியும் வந்தாள். அங்கிருந்த திருமலை நாயக்க மன்னர் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரரின் இன்னிசைப் பாடலை