பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அறநூல் தந்த அறிவாளர்


குட்டித் திருக்குறள்

இந்நூலைப் பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களில் தலைசிறந்தது என்பர். இது நூற்றிரண்டு வெண்பாக்களைக் கொண்டு விளங்குவது. நடையாலும் பொருளாலும் சங்ககாலத்து அறநூல்களுக்கு ஒப்பாக எண்ணத்தக்கது. படிப்பதற்கு இனிமையும் பொருட், செறிவும் உடையது. இதன் சிறப்பை உணர்ந்த பலர், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளனர். ‘குட்டித் திருக்குறள்’ என்ற பெயருக்கு ஏற்ப, இந்நூலில் திருக்குளின் கருத்துக்களும் தொடர்களும் செறிந்துள்ளன,

வாழ்த்தும் வளமும்

இந்நூல் கல்வி, செல்வம், உலகியல், அரசியல், தவம், மெய்யுணர்வு முதலிய சிறந்த பொருள்களின் இயல்டையும் பயனையும் இனிது விளக்குவது. அறத்தின் சிறப்பை அறிவதற்குக் கல்வி வேண்டும் அல்லவா? ஆதலின் அதன் பெருமையை முதலில் கூறியுள்ளார், நூலின் தொடக்கத்தில் எம்பிரான் மன்றத்தை வழுத்தினார், அந்த வாழ்த்துப் பாடலில் நிலையாமை பற்றிய கருத்துக்களைச் சுருக்கமாக விளக்கி விட்டார், இளமை நீர்க்குமிழி-