பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறநெறி அருளிய குருபரர்

75


யைப் போன்றது. செல்வம் நீரில் எழும் அலைகளைப் போன்றது. உடம்போ நீரில் எழுதிய எழுத்தைப் போன்றது. இவ்வாறு இருக்க, எம்பிரான் மன்றத்தை வாழ்த்தி வணங்காமல் இருப்பது எதனால்? அப்பெருமான் மன்றினை வணங்கித் திருவருள் பெற்று உய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இங்கனம் திருக்குறளின் சுருக்கமாக அமைந்த நீதிநெறி விளக்கம் அரியதோர் அறநூல் ஆகும். திருக்குறளில் உள்ள பல அதிகாரங்களின் கருத்துக்களை ஒரு பாடலில் விளக்கும் இந்நூலைக் ‘குட்டித் திருக்குறள்’ என்று குறிப்பது பொருத்தமே அன்றே! குறைந்த சொற்களில் நிறைந்த கருத்துக்களைக் கூறுவது குறள். அக்குறளையும் சுருக்கிக் கூறிய குமரகுருபரரின் கூரிய அறிவை எவ்வாறு போற்றுவது!