பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அறநூல் தந்த அறிவாளர்


அண்ணாமலை ரெட்டியார் அவருக்காகத் திருமடம் ஒன்றை அமைத்திருந்தார். அதில் தங்கியிருக்கும் காலத்தில் அருகில் உள்ள திருவெங்கை என்னும் தலத்திற்குச் சென்று வருவார். அங்குள்ள பழமலைநாதரை வழிபட்டு, அவர்மீது பல நூல்களைப் பாடினார். அக்காலத்தில் அண்ணாமலை ரெட்டியார், சிவப்பிரகாசரை மணஞ்செய்து இல்லறம் நடத்து; மாறு வேண்டினார். அதற்கு அவர், “நூறு வயதுவரை நோயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பேயுடன் வாழ்ந்தாலும் வாழலாம்; பெண் கொண்டு வாழ்வது ஆகாது” என்று கூறி மறுத்தார். ‘தாலி கட்டையிலே தொடுத்து, நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் கவலைதான்’ என்றும் விடை கூறினார். ஆனால், தம் தம்பியர்க்குத் திருமணம் செய்துவைத்து வாழ்த்தினார்.

பொம்மபுரம் போதல்

சில காலம் சென்ற பின் அவர் சிதம்பரம் சென்று தங்கினார். அங்கு இருக்கும் நாளில் ‘நால்வர் நான்மணிமாலை’ முதலான சில நூல்களைப் பாடினார். பின்பு காஞ்சிபுரம் சென்று தங்கினார். அங்கே பேரூர்ச்சாந்தலிங்கர் என்னும் பெரியவரைக் கண்டு அளவளாவினார். அவர்கள் இருவரும் சிவஞான பாலையரைத்