பக்கம்:அறநெறி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அறநெறி

கல்வி

மனிதனை உண்மையான மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பது கல்வி. கல்விப் பயிற்சியே மனிதனை நிமிர்ந்து நிற்கச் செய்யும் மந்திரச் செயலாகும். ஒரு தனி மனிதனுக்குக் கல்வியறிவு மிகப் பயன்படும். அவன் வழிச் சமுதாய மறுமலர்ச்சி தழைக்கும். கல்வி, கேள்வி, அறிவுடைமை இம்மூன்றும் தொடர்நிலைப் பயிற்சி யாவன. இன்று நம் நாடு வளரவேண்டியவற்றுள் ஒன்று அறிவியற்கலை. தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்கள் “தமிழ்க்கலை"யில் இதுபற்றிச் சிறக்கப் பேசுகின்றார். அதில் அவர் அறிவியலை இலக்கியக் கலையோடும் வாழ்வியலோடும் இணைத்துத் தொடர்புபடுத்துகின்றார்.

உலகப் பேரறிஞர்கள் பலர், மனித நேயத்தை அறிவியல் கண்கொண்டு பேசி அதுவே வழியென்று வற்புறுத்தியுள்ளனர். மனித நேயத்தை வளர்ப் பதற்குக் கற்கும் கல்வி மிகப் பயன்படும். இலக்கியத்தின் இலக்கும் அதுவே; இசையின் குறிக்கோளும் மனித நேயமின்றி வேறில்லை என்பர் அறிஞர். ஆகவே கல்வி மூலம் மனித நேயத்தை அறிமுகப்படுத்திப் பரவச் செய்வது இன்றைய உடனடித்தேவைகளுள் தலையாயதா கின்றது.

வாழ்க்கை நீதிகள்

வளரும் இளம் செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப்பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்களை வெளிப்படுத்திய கவிமணி தேசிக விநாயகம் அவர்களை நினைவுகூர வேண்டும். அவரது வாழ்க்கைத் தத்துவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/10&oldid=586833" இலிருந்து மீள்விக்கப்பட்டது