பக்கம்:அறநெறி.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அறநெறி

“கதிரவன் கிரணக் கையால் கடவுளைத் தொழுவான்

புட்கள் கதியொடும் ஆடிப்பாடித் துதிசெய்யும் தருக்களெல்லாம் பொதியலர் தூவிப் போற்றும்

பூதங்தன் தொழில் செய்தேத்தும் அலைகடல் ஒலியால் வாழ்த்தும்

அகமே நீ வாழ்த்தா தென்னே!” மூன்றாவதாக வைரமுடைய நெஞ்சு வேணும்’ என்கிறார் பாரதியார். ஆங்கிலத்தில் “Wil power” என்று சொல்லப்படுவது இதுவேயாகும். ஒரு முடிவிற்கு வருவதற்கு முன் மனம், அந்தச் செயலினுடைய சாதக பாதகங்களை எண்ணிப்பார்க்கவேண்டும். அவ்வாறு தீர எண்ணி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி மேலும் எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது. ஒர் உறுதியான மனம் படைத்தால்தான் செயலிலே வெற்றிபெறமுடியும். இதனையே, பாரதியார் பிறிதோர் இடத்தில்,

“நல்லவே எண்ணவேண்டும்’ என்றும்,

‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

‘தெளிந்த கல் அறிவு வேண்டும்’

என்றும், குறிப்பிட்டுள்ளார். எனவே, நெஞ்சில் உறுதி கொண்டால், அந்த உறுதியுடன் செயலாற்றினால் வெற்றி உறுதி என்பது இதன் வழிப் புலப்படுகின்றது.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டுமென்றும், தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் என்றும், வைரமுடைய நெஞ்சு வேண்டும் என்றும் இதையே வாழ்வின் முறைமை என்றும் பாரதியார் பாப்பாக்களுக்குப் பாப்பாப் பாட்டில் கூறியுள்ளார். இவ் அறிவுரைகள் மனித சமுதாயத்திற்கே பொதுமையானவை என்று உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/100&oldid=586835" இருந்து மீள்விக்கப்பட்டது