உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அறநெறி

சாதிச் சழக்குகள் இந்த மண்ணில் நிலையாக இருந்து கொண்டேதான் வருகின்றன.

இந்நிலையினைக் கண்டார் விவேகானந்தர். உலக மலை உச்சியில் இந்தியாவின் ஞான விளக்கை நலமுற ஏற்றிவைத்த தீரர் அல்லவா அவர்; எனவே நரேந்திரர் என்னும் பிள்ளைத் திருப்பெயர் பூண்டு கல்வியில் வல்லவ ராய், யாக்கையை உறுதி செய்து கொண்ட வாழ்ந்த உள்ளத்தவராய் விளங்கிய அவரின் இளமைக்கால வாழ்வு இன, சாதி, சமய பேதமற்ற வாழ்வுக்கு ஒர் எடுத்துக் காட்டாய்த் துலங்கியது.

கங்கை யாற்றங்கரையிலே காளிகட்டத்திலே இப் போதைய கல்கத்தாவில் விசுவநாத தத்தர் என்னும் வழக்கறிஞர்க்கும் புவனேசுவரி அம்மையாரிக்கும் 1863 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பன்னிரண்டாம் தேதி மகவாகப் பிறந்த நரேந்திரர் சின்னஞ்சிறு வயதிலேயே மனிதனிடம் அமைந்திருக்கிற சின்னஞ்சிறு வேற்றுமைகளுக்கெல்லாம் இடந்தரவில்லை.

விவேகானந்தரின் தந்தையாம் விசுவநாத தத்தர் ஒரு வழக்கறிஞரானபடியினால் அவரிடம் வழக்குகள் தரப் பல்வேறு சாதியைச் சார்ந்த மக்கள் வந்துகொண்டிந் தனர். விவேகானந்தரின் வீட்டில் அந்தந்த சாதியாரின் உயர்வு தாழ்வுகளுக்கு ஏற்றபடி உணவு முதலியனவும் உபசாரம் முதலியனவும் பற்பல முறைகளில் வழங்கப் பட்டன. ஒருவர் விட்டிற்கு வெளியே உபசரிக்கப்பட்டார்; ஒருவர் ஆளோடியில், (வெராந்தா) விசாரிக்கப்பட்டார். இலருக்கு வரவேற்பறைகளில் விருந்து தரப்பட்டது. சிலருக்கு உண்ணும்சாலையில் உணவு பரிமாறப்பட்டது. சிலருக்குச் சமையல்கட்டு வரையிலும்கூட இடம் அனுமதிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/102&oldid=586837" இலிருந்து மீள்விக்கப்பட்டது