பக்கம்:அறநெறி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ொா. IOI

இந்தக் காட்சிகள் கள்ளமறியாத பிள்ளைப் பருவத் திலே சிறுவன் நரேந்தரின் மனத்தில் பெருத்த வினாக்குறி களாக வெடித்தன. ஒருவன் மற்றொருவனோடிருந்து ஏன் உண்ணக்கூடாது? அவ்வாறு இருவேறு சாதியைச் சார்ந்த இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டால் என்ன நேரிடும்? அவ்வாறு வெவ்வேறு சாதியைச் சார்ந்த இருவர்க்கும் ஒன்றாகத் தம் வீட்டில் உட்கார வைத்து உணவு பரிமாறினால் உடனே தன்னுடைய வீடு கீழே விழுந்து தரைமட்டும் ஆகிவிடுமா? அல்லது அவ்வாறு தம் வீட்டில் ஒன்றாக உட்கார்ந்து உண்ணும் இருவரும் உடனே மாண்டுபோய் விடுவார்களா? என்றெல்லாம் உலகில் ஞானச் சுடர் விளக்கேற்றிய தவச்சிரேட்டராம் விவேகானந்தரின் நெஞ்சம் சிந்தித்தது. இதற்கு விடை காண முடியாமல் அவர் பிஞ்சு உள்ளம் பேதலித்தது. ஆனாலும் அவருக்கு மட்டும் நல்ல தெளிவு இருந்தது. தம் வீட்டார் எப்படி நடந்துகொண்டாலும் சரி, தம்மைப் பொறுத்தவரையில் அத்தகைய வேற்றுமைகளையெல்லாம் கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார். அவ்வாறு எந்த வகை நீதியும் நியாயமும் இருப்பதாக அவர் எண்ணவில்லை.

எனவே எல்லாச் சாதி மக்களிடமிருந்தும் தின்பண்டங் களை விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தார். அப்போது அவர் எண்ணினார்: “இவ்வாறு நான் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து தின்பண்டங்களை வாங்கி உண்டமையால் எனக்குச் சாவு ஏதும் வரவில்லையே; அதன் விளைவாக உலகமும் அழிந்து போய்விட வில்லையே! அவை அவை இருந்த இடத்தில் அப்படி அப்படியேதானே இருக்கின்றன. அப்படியிருக்கக் சாதியைப் பற்றிய இவ்வளவு தடபுடல்கள் ஏன்? எதற்காக

7-س۔ .rھی۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/103&oldid=586839" இலிருந்து மீள்விக்கப்பட்டது