பக்கம்:அறநெறி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, offs 105

என்பதைக் கண்டார் விவேகானந்தர். எனவே அவித்திருக்கும் ஏழையைக் கண்டு இரங்குவதே மனித குல உயர்வுக்கு எடுத்து வைக்கும் முதற்படியாக அமையும் :ன்று கண்டார் விவேகானந்தர். “பசியறாத வெற்றுடம் பினரைக் கண்டு உளம் பதைத்தேன்” என்று அருட் பிரகாச வள்ளலார் கூறுவதுபோல, விவேகானந்தரும் “கடவுள் ஏழைகளுக்குக் கஞ்சியின் வடிவத்திலும் ரொட்டி யின் வடிவத்திலும் வருவார்” என்று, சொன்னார். பசித் திருக்கும் வயிறுடையோரிடம் கடவுளைப்பற்றிய கருத்து களைக் கூறுவதிற் பயனில்லை என்று கண்டு தெளிந்தார். எனவேதான் மு. த லி ல் ஏழையின் வயிற்றுக்குச் சேrறிட்டுப் பசிப்பிணியை அகற்றுவதே நாட்டுப்பற்றுக்கு நலமுறு அடையாளம் என்று மொழிந்தார்.

‘உண்டி முதற்றே உலகு என்று கண்டு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று நம் முன்னோர்கள் கண்டனர். மகாகவி பாரதியாரும்,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்பாரை உயிர்த்திடவேண்டும்

என்றார்.

அந்த முறையில்தான் விவேகானந்தரும் ஒரு நாட்டில் ஒரு சிறு பகுதியினர் உல்லாசமாக உண்டு களிக்கவும் பெரும் பகுதியினர் பாமரராய், பசித்தவராய் வாழ்வதும் பாவம் என்று கருதினார். ஒரு பகுதியினர் பசியினால் வாடி வருந்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டுப்பற்று என்றும், நாட்டு முன்னேற்றம் என்றும் கூப்பாடு போடுவ தால் பயனில்லை என்று கண்டார். எனவே வசதி மிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/107&oldid=586844" இலிருந்து மீள்விக்கப்பட்டது