பக்கம்:அறநெறி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அறநெறி

களை வருத்தி வாட்டிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு கல்வி கற்றபின் அவர்களுக்குப் பிரதியுபகாரம் ஏதேனும் செய்யாத ஒவ்வொருவனையும் துரோகி என்றுதான் சொல்லவேண்டும். பாமரர்களை வதைத்து ஈட்டிய செல்வத்தைக் கொண்டு பெருமித வாழ்வு வாழ்ந்து, உடலை அலங்கரித்துப் பிலுககித் திரிபவர்கள் எல்லாரும் வஞ்சகம் செறிந்த பாதகர்களேயாவர்”.

மேலும் அவர் சொல்லுகிறார்: “அறிவிலிகள், வறியர், கல்லாதவர், சக்கிலியர்கள், பறையர்கள் எனப்படுவோர் எல்லோரும் உனது உற்றார், உறவினர், உடன்பிறந்தார் என்பதை மறவாதே. அஞ்சுதல் அறியா நெஞ்சம் படைத் தோய்; ஆண்மை கொள்; துணிவு கொள்; நீ ஒர் இந்தியன் என்பதைப் பற்றிப் பெருமை பாராட்டு. “நான் ஒர் இந்தியன். ஒவ்வோர் இந்தியனும் எனது சகோதரன்” என்று பெருமையுடன் பகர்வாயாக. கல்லாத இந்தியன், தரித்திர இந்தியன். தீண்டத்தகாத இந்தியன். பிராம்மண இந்தியன், பறைய இந்தியன் என்று எண்ணாதே. எல்லா இந்தியர்களும் எனது சகோதரர்கள்ே’ என்று சொல். அவர் கள் போன்று உடுக்கக் கந்தையொன்றே உனக்குப் போது மானது. இந்தியன் எனது சகோதரன், இந்தியனே எனது உயிர்; இந்தியாவின் தேவதைகளே நான் வணங்கும் கடவுள்; பிள்ளைப்பருவத்தில் எனக்குத் தொட்டிலாயிருப் பதும், யவனத்தில் இன்பம் துய்ப்பதற்கேற்ற நந்தவனமா யிருட்பதும் எனது முதுமைக்கேற்ற சுவர்க்கமாயிருப்பதும் இந்திய தேசமே. நாட்டுக்கு நலன் தருவது எதுவோ அதுதான் நான் வேண்டுவதும் என்று உரத்த குரலிலே முரசு அறை. அகிலாண்ட நாயகியே; ஆண்மை எனக்கு அளித்தருள்; வலிவு பிறப்பிப்பவளே! எனது மெலிவைக் களைந்திடு; தகர்வைத் தகர்த்திடு; உறுதியை ஒம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/110&oldid=586849" இலிருந்து மீள்விக்கப்பட்டது