பக்கம்:அறநெறி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.சா. I09

என்னை ஆண் மகனாக ஆக்கிடு’ என்று அல்லும் பகலும் வழுத்தி நீ வேண்டிடுவாயாக.”

இவ்வாறு விவேகானந்தர் ஒளி படைத்த கண்ணினராக ஒளிர்வதற்கு, உறுதிகொண்ட நெஞ்சினராக உலா வருவதற்கு அன்னை அம்பிகையின் அருளைப் பரவி

நிற்கிறார்.

பாமரர்கள் பசியார உண்டு, கல்வி கற்று, வளமான வாழ்வு வாழ வேண்டுமென்றும், எல்லோரும் இந்தியத் தாயின் திருப்புதல்வர்கள் என்னும் எண்ணம் உண்டாக வேண்டும் என்றும் விவேகானந்தர் விளங்க உரைக் கின்றார்.

எனவே வயிற்றுக்குச் சோறும், நெஞ்சுக்குக் கல்வியும், வாழ்விற்கு ஒற்றுமையும் ஒருங்கே தேவை என்பதனையும் இவை அனைத்தையும் அளிக்கும் ஆற்றல் ஆண்டவனுக்கு உண்டு என்பதனையும் விவேகானந்தர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் சாரமாகக் கூறும் அறவுரையினை, மணி மொழியினை நாம் ஒருநாளும் மறத்தலாகாது.

“என் மகனே! உறுதியாக நில். பிறர் உதவியை எதிர்பாராதே. வேறு மனிதர்களின் உதவியைக் காட்டி லும் ஆண்டவனுடைய உதவி எவ்வளவோ பெரிதல்லவா? பரிசுத்தனாயிரு, பகவானை நம்பு, அவரை நம்பியுள்ள வரை, நீ நேர்வழியில் செல்கிறாய் என்று பொருள். உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது “

ஆகவே விவேகானந்தருடைய ஆற்றல் வாய்ந்த ஆன்மீக மணிமொழிகளை நாம் மனங்கொண்டு செயல் திட்டம் வகுத்து முன்னேறுளோமாயின் வீடும் நாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/111&oldid=586850" இலிருந்து மீள்விக்கப்பட்டது