பக்கம்:அறநெறி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C அறநெறி

அற்ற வாழ்வை விரும்பினால், எல்லாம் உள்ளபோதே பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்: துறந்த பிறகு இந்த வாழ்க்கையில் கைகூடும் இன்பங்கள் பல உண்டு.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’ (341) என்றும்,

‘வேண்டின் உண்டாகத்துறக்க, துறந்தபின்

ஈண்டியற் பால பல’ (342)

என்றும், திருவள்ளுவர் உணர்த்துவனவற்றை உளங் கொளல் தகும்.

செய்யத்தக்கது

உள்ளமே பெருங்கோயில் என்பதை-ஒப்புக்கொள்ள வேண்டும். மனம் ஐம்பொறிகளையும் தனக்குள் அடக்கி வைத்திருக்குமேயானால் மனத்தின் தூய்மை வாழ்க்கையி னுடைய துாய்மையாகத் துலங்கும் பாரதியார் வேண்டுவது போல,

‘யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,

யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய். வாழ்ந்திட விரும்பினேன்; மனமே நீ யிதை ஆழ்ந்து கருதி, ஆய்ந்தாய்ந்து, பலமுறை சூழ்ந்து தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம் கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து, தேறித்தேறி நான் சித்திபெற் றிடவே, கின்னா லியன்ற துணைபுரி வாயேல், பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்’

என வேண்டும் நாள் இப்புத்தாண்டு நாளேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/12&oldid=586857" இருந்து மீள்விக்கப்பட்டது