பக்கம்:அறநெறி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G.orr. I?

II

உண்டால் அம்ம, இவ்வுலகம்’ என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று தொடங்குகின்றது. பிறர்க்கென முயலுநர் உண்மையின், இவ்வுலகம் நடைபோடுகின்றது எனக்கூறி, அவ்வாறு முயல்வதே சிறந்த உறுதிப்பொருளாகும் என்றனர் பண்டையோர். இக் காலத்துக்கு மிகவும் தேவையான செய்யுள் இது. பிறருக்காக உருகும் தன்மை பெற்ற பிறகே நெஞ்சம் வளர்கிறது எனலாம். அன்பு விரைந்து பெருகும் வாய்ப்பு மக்கட் பிறவிக்கு உண்டு. மானிடப்பிறவி விழுமியதே. உயர்ந்த அப்பிறவியைப் பயனுடைய பிறவியாக்கவேண்டும்.

“மனித வாழ்க்கை ஒரு தீப்பெட்டியைப் போன்றது. அதில் உராய்ந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் ஒரு தீக்குச்சிக்கு ஒப்பானது. விதியின் கரங்களால் செயல்படும் அந்தத் தீக்குச்சிகளில் சில நமர்த்துப்போகலாம்; அப்போது வாழ்க்கை சாரமற்றும், சலனமற்றும் காணப்படுகின்றது. சில குச்சிகள் மத்தாப்பூத் தன்மையுடன் வர்ணவிசித்திரம் காட்டலாம்; அப்போது வாழ்க்கை இனிமையாகவும் எழிலாகவும் சுவையாகவும் தென்படுகிறது. சில குச்சிகள் திடீரென்று தீப்பற்றி எரியலாம்; அப்போது வாழ்க்கை துன்பமும், துயரமுமாக, கசப்பும், புளிப்புமாக, வெறுப்பும், வேதனையும்ாக, சுமையும் சோதனையுமாக ஆகிறது இப்படிச் சுட்டுப் புண்படுத்தும் இத் தீக்குச்சிகளை மத்தாப்புக் குச்சிகளாக மாற்றும் முயற்சியிலேயே மனித சக்தி முழுவதும் செ லவாகிறது. அது ஒரு தொடர்ப் போராட்டமாகவே நீடிக்கிறது. போராட்டம் பூந்தென்ற லாக மாறுமாறு நம் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

1. ஜெகசிற்பியன், சொர்க்கத்தின் நிழல், ப.424.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/13&oldid=586858" இருந்து மீள்விக்கப்பட்டது