பக்கம்:அறநெறி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அறநெறி

காலம் சுழலுகின்றது, நாள்கள் உருண்டோடுகின்றன: புத்தாண்டும் பிறக்கின்றது. காலப்போக்கில் எத்தனையோ புதுமைச் சிந்தனைகள், புரட்சிச் சித்தாந்தங்கள் ,ோன்றியே வந்துள்ளன. ஊழிக் கரங்களால் சுழற்றி வீசப்படும் நிகழ்ச்சிகள் விறாந்த வேகத்துடன் பாய்ந்து வந்து கொஞ்சங்கூடக் குறிபிசகாமல் மனித வாழ்வைத் தாக்குகின்றன. மனிதனுடைய அறிவும் ஆற்றலும் இன்னும் உச்சநிலை எய்திவிடவில்லை என்பதையே இது காட்டுகின்றது. ஆயின் மனிதன் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியெய்தவில்லையா? உடலாலும், உள்ளத்தாலும் அவன் வளர்ச்சி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறான். மக்கள் நிறைந்த இந்தச் சமுதாயத்தின் விதிமுறைகள் காலத்தையொட்டி மாறிக்கொண்டே இருப்பதால் மனிதனது கணிசமான வளர்ச்சி கண்ணுக்குப் புலனாக வில்லை.

வாழ்க்கைப் பயணம் என்று கூறுகின்றோம். ஊர்ப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட ஊரைச் சென்று அடைவதுபோல இந்தப் பயணத்திலும் அழியாத சில நல்ல குறிக்கோள்களை முன்பணயமாக வைத்துத் தொடர்ந்து செல்லவேண்டும். அழியாத குறிக்கோள்கள் யாவை? அவை பலவாகும்.

குடும்ப முன்னேற்றம்

குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் முன்னேற்றம் உடைய குடும்பம் எவ்வாறிருக்கும் என்பது பற்றிய பாவேந்தர் பாரதிதாசனின் எண்ணங்களை அவரது குடும்பவிளக்கு ஒளிவீசச் செய்கின்றது. அதில் ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்னும் கவிஞரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/14&oldid=586859" இலிருந்து மீள்விக்கப்பட்டது