பக்கம்:அறநெறி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6A, նո, 13

கருத்துப் பிழிவைக் காணுகின்றோம். அந்நூல் முழு வதிலும் இலக்கியச்சுவை இழையோடுகின்றது என்றாலும் ஒரு நாள் நிகழ்ச்சி மட்டுமே படித்தாலும் பானைச் சோற்றுக்குப் பருக்கைப் பதங்காணச் சாலும்! அதில் பொதுத் தொண்டு செய்தோமா? எனத் தங்கம் கேட்ட வினா ஒன்று போதும்!

“அதிகாலை தொடங்கி நாம் இரவுமட்டும் அடுக்கடுக்காய்

நமது நலம் சேர்ப்பதல்லால் இதுவரைக்கும் பொது நலத்துக்கென்ன செய்தோம். என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதுவு மில்லை’ என்றாள் அவள் தன் கணவனிடம்: ‘வீட்டுத் தொண்டா பொதுத்தொண்டு? என்றால் அதுவல்ல

“தமிழரென்று சொல்லிக்கொள்கின்றோம் நாமும்; தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்! எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்! எப்போது தமிழனுக்குக் கையா லான நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில் அமைவாகக் குந்தி நினைத் தோமா? இல்லை அனைவரு மிவ் வாறிருந்தால் எது நடக்கும்.

எனத் தங்கம் படிக்கணக்கைப் பேசிவிட்டாள்.

‘வினையே ஆடவர்க்குயிரே என்னும் சங்கத் தமிழ் கூறும் தலைவன் வாயிலாகவன்றி, மனையுறை தலைவி வாயிலாக இச்சொற்களைப் பேசவைத்த பாவேந்தரது பாங்கான மனத்தை இப் பெண் மக்கள் ஆண்டில் - அவரது நூற்றாண்டு நேரத்தில் நினையாதிருக்கக்கூடுமோ? கூடாது. ஒருநாள் நிகழ்ச்சியிலேயே இந்நினைவு எழக்கூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/15&oldid=586860" இலிருந்து மீள்விக்கப்பட்டது