பக்கம்:அறநெறி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அறநெறி

மேல், ஒராண்டை ஒட விட்டிருக்கும் நிலையிலும், புத்தாண்டினைத் தொடங்கும் இந்நேரத்திலும் இது வரைக்கும் பொதுநலத்துக்கென்ன செய்தோம்?’ என எண்ணிப் பார்ப்பதும், எடுத்துச் சொல்லுவதும் எழிலுற அவ்வழி வினையாற்றுவதும் பொருத்தமேயன்றோ?

“நாடெல்லாம் வாழக் கேடொன்றுமில்லை; என்பர். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லால் வேறொன்ற றியேன் பராபரமே” என்று கூறினார் தாயுமானசுவாமிகள்.

நம்பிக்கை :

மனிதனுக்குத் தன்னம்பிக்கைவேண்டும் புதியதோர் எழுச்சி கூடவேண்டும். ஏனெனில் மனிதன் புதுமை காண்பவன்; வளர்ச்சிகாண விழைபவன்; சிறந்த சாதனையாளன்; தன்னால் எல்லாமே இயலும் என்னும் திண்ணிய எண்ணம் மட்டுமே அவனுக்குத் தேவையானது கடந்தகாலச் சாதனைகளைக் கணித்துத் தொடங்கும் புத்தாண்டின் புதுச்சாதனைகளை வகைப்படுத்தி வளஞ் சேர்க்க அவன் பாடுபடவேண்டும்.

“தன்னைத்தான் ஆளும்தன்மை நான் பெற்றிடில்,

எல்லாப் பயன்களும் தாமே எய்தும், அசையா நெஞ்சம் அருள்வாய்’ என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி வேண்டியமை ஈண்டு நினைவுகூரத் தக்கதாம்? உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டியே அசையா நெஞ்சம் வேண்டுமென்றார் அவர். நடமாடும் கோயில் நன்மக்களுக்கு இயன்ற அளவு தொண்டுபுரிதல், உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், எளிய வாழ்க்கை வாழ்தல் பிறர்க்கின்னா செய்யாமை, பெரியோரைத் துணைக்கோடல் போன்றவை அழியாத கு றிக்கோள்களுள் சிலவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/16&oldid=586862" இருந்து மீள்விக்கப்பட்டது