உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

15



“கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்-ஒல்வ
கொடா அதுஒழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்”


என நான்மணிக்கடிகை நவில்கின்றது. ஆம்! ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளாத நாள், சான்றோரைச் சந்திக்காமல் வீணே கழியும் நாள். தனக்கு இயன்றதைப் பிறருக்குக் கொடுத்து மகிழாத நாள்-சொல்லப் போனால் இவ்வித நாள் எதுவும் பண்புடையோர் வாழ்வில் வருவதில்லையாம்! இக்கருத்துகளை நம் மனம் ஒவ்வொரு நாளும் அசைபோடவேண்டும். சலனம் இல்லாத மனம், இருள் இல்லாத மதி, நினைக்கும் பொழுதெல்லாம் இறைவனுடைய அமைதிநிலை வந்திடும் வாய்ப்பு ஆகியவற்றோடு ஒரு வரம் வேண்டிடவேண்டும்.


பாரதியார் வேண்டுகின்றார் :


“மனத்திற் சலன மில்லாமல்,
      மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
     நிலைவங் திடநீ செயல்வேண்டும்;
கணக்குஞ் செல்வம், நூறு வயது;
      இசையும் தர நீ கடவாயே”


இந்தப் பாடலைக் கொண்டுதான், நம்முடைய நாள் குறிப்பைத் தொடங்கவேண்டும் என்று தோன்றுகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/17&oldid=1685236" இலிருந்து மீள்விக்கப்பட்டது