2. அறநெறி
I
இவ்வுலகத்தில் நிலை யாக நிலைத்திருப்பது ஒன்றுண்டு. அதுதான் நிலையாமை. நில்லாமையே நிலையிற்று ஆகலின்’ என்பர் சான்றோர். தமிழ்ச் சான்றோர் தொல்காப்பியனார் நிலையாமையினைக் “காஞ்சி’ என்ற சொல்லால் குறிப்பர். ‘பலர் செலத் தான் செல்லாக் காடு’ என்றும் நிலையாமை பேசப்படும். இந்நிலையற்ற உலகில் நிலைத்திருப்பது புகழ் என்று கண்டனர் நம் முன்னோர்.
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே
என்ற புறநானூறு இதனைக் குறிப்பிட்டது நிலையற்ற வுலகில் நிலைத்திருக்கும் புகழ் எவ்வாறு ஒருவருக்குக் கிடைக்கும்? அவவாறு குன்றாப்புகழை ஈட்டுவதற்கு வழி என்ன?
அறநெறி சார்தலே பொன்றாப் புகழைப் பெறுதற் குரிய ஒரே வழியாகும். இதனைப் பண்டே நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்குப் புறநானுாறு என்னும் பழந்தமிழ் நூலே சான்று பகர வல்லதாகும்
மதுரை தமிழ் நிலைபெற்ற இடம். முச்சங்கம் வைத்து மொழி வளர்த்தவர்கள் பாண்டியர்கள். மாடமதுரை தமிழ் மொழியும் இலக்கியமும் தழைத்த