பக்கம்:அறநெறி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறநெறி

யான உயர்வான சிறப்பாகும். எனவே அவன் மேற்கொள்ளவேண்டிய அறநெறிகள் மூன்றாகும். அவையாவன : ஒன்று : நமக்கு வேண்டியவர்கள்

தவறு செய்வார்களேயானால் அ வ ர் க ளு க் கா க நீதியினின்றும் வழுவக்கூடாது. இரண்டு : அயலார் தனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவுதான் நல்லவர் களாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்மை விளைவிக்கும் செயல்களைச் செய்தாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்காமல், மாறாக செங்கோல் வளைந்து அவர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. மூன்று : பகலில் வான வீதியில் வரும் பகலவன் போல ஆண்மையும் இரவில் வெண்ணிறக் கதிர்களைச் சொரியும் சந்திரன் போன்று அருளும், காலத்திற் பெய்து மக்கள் மனங்களைக் கணிவிக்கும் மழை போன்று கொடையும் உடையவனாகப் பாண்டியன் நன்மாறன் விளங்க வேண்டும். இல்லை என்று இரந்து வந்துவிட்ட இல்லாதவர்க்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு ஈந்து அவர்தம் துயரினைத் துடைக்கவேண்டும் என்று புலவர் இடித்து மொழிகின்றார்.

கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தள் மாற! கடுஞ்சினத்த கொல்களிறும்,கதழ்பரிய கலிமாவும்: நெடுங்கொடிய கிமிர்தேரும், நெஞ்சுடைய புகல்மறவரும்

GT6.jт நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதனால், நமரெனக் கோல்கோ டாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/20&oldid=586868" இலிருந்து மீள்விக்கப்பட்டது