பக்கம்:அறநெறி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 8,ሠff•

அறர் எனக் குணங்கொல்லாது. ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண்பெரும் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீ நீடு வாழிய நெடுந்தகை!

-புறநானூறு: 55:4-17

பழைய புறநானுாற்றுப் பாட்டே ஆயினும் அரசர்க்கு அறிவுறுத்தப்பெற்ற அறநெறியேயாயினும், ஈராயிரம் ஆண்டுகள் கழிந்து முடிந்து போயிற்றே ஆயினும்கூட, இப்பாட்டில் இனறு நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய-மேற்கொண்டு உறுதியாக ஒழுகவேண்டிய அறநெறி பளிச்சிடக் காணலாம்.

எவ்வளவுதான் வல்லவராயிருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும் எனபது முதலிற் பெறப்படும் செய்தி யாகும். அடுத்து, வல்லமையும், எதனையும் சாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டாலுங்கூட, நம்மவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் முறையின்றிச் செய்யும் தீச்செயல்களைப் பொறுத்துப் பாதுகாப்பு கொடுக்கத் தலைப்பட்டு விட்டால் இறுதியில் அழிவு உறுதி என்பதாகும். அதுபோன்றே நமக்கு வேண்டாதவர் என்பதற்காக அவர் செய்யும் நற்செயல்களுக்குக்கூடக் களங்கம் கற்பித்துத் தண்டிக்கத் தொடங்குவோ மானால் இறுதி நமக்கு உறுதி என்பதை உறுதியாக எண்ண வேண்டும் எனவே மறவர் ஒருவர் நற்செயல் செயினும் அதனைப் போற்றி வ:வேற்று, தீச்செயல் செயின் அதனைக் கடிந்து நீக்கி, கதிரவன் போல் ஆண்மையும், திங்களைப் போன்று அருளையும், மழையைப் போல் கொடையும் பண்பும் கொண்டு அறநெறியில் வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/21&oldid=586869" இலிருந்து மீள்விக்கப்பட்டது