பக்கம்:அறநெறி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறநெறி

முற்படுவோமானால் திருச்செந்தூர் உறையும் திருமுருகன் திருக்கோயிலின்முன் கு வி ந் தி ரு க் கு ம் மணலின் எண்ணிக்கை போலப் பல்லாண்டுகள் பயனுற இப்பாரில் வாழலாம் என்பது ஆன்றோர் கண்ட அறநெறி முடிபு.

II

சைவப்பயிர் தழைக்கத் திருத்தொண்டாற்றிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமாசிமாறர். “சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர் இவர்: சிவனை முழுதும் மறவாத சிந்தையான் என்ற முன்னை வழக்குப்படி எந்நேரமும் சிவன் சேவடியையே சிந்தித்து வீடுபேறு பெற்றவர்.

நாயன்மார்கள் வாழ்ந்த வாழ்வு நமக்கெல்லாம் ஒர் எடுத்துக்காட்டான வாழ்வாகும். தென்னாடுடைய சிவனை-எந்நாட்டவர்க்கும் இறையை வந்தித்து வணங்கி யவர்கள் நாயன்மார்கள்.

யாதொரு தெய்வம் கொண்டீர் ஆதொரு தெய்வமாக

மாதொரு பாகனார்தான் வருவார் என்பது சைவ நியதியாகும். “நமச்சிவாய வாழ்க: நாதன்தாள் வாழ்க” என்று தொடங்குகின்றது சிவ புராணம்.

காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே என்பது பிள்ளையார் என்று புகலப்படும் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாடிய தேவாரத் திருப்பதிக மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/22&oldid=586871" இருந்து மீள்விக்கப்பட்டது