பக்கம்:அறநெறி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 21

சிவன் கழலைச் சிந்திப்பதற்கும் பேறு வாய்க்க வேண்டும். “அவனருளாலே அவன்தாள் வணங்கி” என்பர் ஆன்றோர். “சிவம்’ என்ற சொல்லிற்கே செம்மை’ என்பது பொருள். “சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்’ என்ற தொடர்கொண்டு தூய்மை யும் செம்மையும் கொண்ட சிவபெருமான் திறத்தினை ஒருவாறு உணரலாம்.

“சோழநாடு சோறுடைத்து” எ ன் பர். மாரி பொய்ப்பினும் தான் பொய்யாப் பொன்னியாறு வளஞ்சுரந்து செழுமைப்படுத்தும் திருநாடு சோணாடு. காவிரிக்கரை நெடுகிலும் அதன் இரு மருங்கிலும் எண்ணற்ற சிவன் திருக்கோயில்கள் உண்டு. சைவப் பதிகள் பலவற்றைக் கொண்ட நாடு சோணாடு. அச் சோழ நாட்டில் திருளம்பர் என்னும் ஊர் நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய ஊர் என்பதனை அவ்வூர் சோலை கள் மிகுந்துள்ள ஊர் என்பதனால் அறியலாம். இதனைத் தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமான் சூதம் பயிலும் பொழில் அம்பர் என்று பாடுவார். இத்தகு இயற்கை எழில் சூழ்ந்த திருவம்பரில் ஒரு வேதியர் குடும்பத்தில் சோமாசிமாறர் பிறந்தார். அவர் பிறந்த (5ւԳ. நற்றவக்குடி; தூய்மையும் வாய்மையும் தொண்டும் மிக்க குடி. வேதத்தினை முறையாகப் பயின்றவர்கள் ஆதலின் அவர்கள் நான்மறை முற்றிய புலமையாளர்களாகத் திகழ்ந்தனர். புலனின் பத்திற் செல்லாமல் ஈசன் கழலின்பத்தில் மனம் வைத்த மறையாளர்கள் அவர்கள். இவர்கள் வழிவழியாகச் சிவத் தொண்டில் தலைப்பட்டு நின்றார்கள். திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமானின் அடியார்கள் எவரேனும் வந்தால், அவர்கள் திருவடிகளில்

முறைப்படி விழுந்து வணங்கி எழுந்து, அவர்களைத் தம்

அ._2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/23&oldid=586872" இலிருந்து மீள்விக்கப்பட்டது