பக்கம்:அறநெறி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அறநெறி

வீட்டிற்கு அழைத்துச் சென்று அமுது படைக்கும் அருளாளர்களாக இச்சிவநேயச் செல்வர்கள் துலங் இனார்கள்.

திருவம்பரில் வாழ்ந்து வந்த வேதியர்க்கு இரண்டே தொழில்கள்தாம் இருந்தன. யாழைப் பழித்த மொழி யினரான உமாதேவியினை இடப்பாகம் கொண்ட இறைவராம் சிவனார்க்கு வேள்வி இயற்றி நிற்றல் இவர்தம் கடன் எனக் கருதினர். பிறர் நலம் புரக்கும் பெருமாண்பினால் வேள்வி இயற்றல் இவர் பணியாயிற்று.

எல்லாரும் இன்புற்றிருக்க கினைப்பது வே

அல்லாமல் வேறொன் றறியேன் பராப்ரமே என்று தாயுமான தயாபரர் கூறுமாறு, உலக மக்கள் உய்ய வேண்டும் என்னும் பெரு நினைப்பே இவர்தம் வாழ்க்கை யின் குறிக்கோளாக இருந்தது. இரண்டாவதாக, சிவன் கழலேத்தும் செல்வமே செல்வம்’ என்பது இவர்கள் சிந்தையில் ஊறிவிட்ட உறுதியான கொள்கையாகும். வேள்வி இயற்றலும், சிவன் கழல் போற்றலுமாக இவர்கள் வாழ்வு சென்றது.

‘சிவாயநம எனச் சிந்திக்கப் பெறுதல் உயர்நிலை உலகம் புகுதற்கு எளிய வழியாகும்.

“சிவாயநம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு

நாளும் இல்லை-இதுவே உபாயம்’

என்று பின்வந்த பெரியோரும் கூறினர். ஐந்தெழுத்து

மந்திர ஆற்றல் வாய்ந்ததாகும். திருநாவுக்கரசர் பெருமானைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்ட

பொழுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/24&oldid=586873" இலிருந்து மீள்விக்கப்பட்டது