பக்கம்:அறநெறி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 2.3

சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயவே என்று பாடி இன்புற்றிருந்த நிலையைத் திருத்தொண்டர் புராணம் தெளிவுறுத்தும். அவ்வகையில் ஐந்தெழுத்தை விடாமல் பயிற்றுவரும் வேதியர் குலத்திற் பிறந்த சோமாசிமாறர், சீரும் திருவும் பொழியும் திருவாரூர் சென்று சேர்ந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகை தோன்றக் காரணமாக இருந்த இடமே திருவாரூர்த் தேவாசிரிய மண்டபம் அன்றோ? ஆரூரானை மறக்கலும் ஆமே என்றபடி, திருவாரூர் தியாகேசப் பெருமானின் திருக்கோயிலுக்கு நாள்தோறும் சென்று அப்பரமன் பாதம் பாடிப் பரவி நின்றார். திருவாரூர் என்றவுடன் திருவாரூர்த் தெருவில் தம் பொருட்டுத் திருவாரூர்த் தெருக்களில் சிவபெருமானை நடக்கவிட்ட சுந்தரமூர்த்தி எனும் நாவலூர் பெருமான் நினைவிற்குவருதல் இயற்கை. திருவாரூரில் பரவை, நாச்சியாரை மணந்து வாழ்ந்து, பின் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்து வாழ்ந்து, இறுதியில் வெறுத்தேன் மனை வாழ்க்கை’ என்றும், மற்றுப்பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்’ என்றும் பாடி நைந்து உருகியவர் நாவலூர்ப் பெருமானாம் சுந்தரர் ஆவர். எனவே சோமாசிமாறர் நாவலூர்ப் பெருமானின் நற்பதத்தினை நாள்தோறும் நினைந்து நைந்துருகினார். பொறி புலன்களால் வரும் இன்பத்தை வெறுத்தார், ஐம்புல வேடர்களால் அலைக் கழிக்கப்படும் வாழ்க்கை அல்லல் மிகுந்த வாழ்க்கை என்று துணிந்தார். சிற்றின் பத்திற்கு ஒர் எல்லை வரம்புண்டு: ஆஃது அழியக் கூடியது என்ற முடிவுக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/25&oldid=586874" இருந்து மீள்விக்கப்பட்டது