பக்கம்:அறநெறி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறநெறி

பேரின்பம் நிலை பேறுடையது; சிவன் கழலே பேரின்பம்; அதனை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள் என்று தெளிந்தார். தம் புலன்களை வென்று இறையடி சேர்ந்து சிவலோக இன்பம் பெற்றார்.

“புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்” என்பதற்கு எடுத்துக் காட்டாகச் சோமாசிமாற நாயனாரின் வாழ்வு துலங்குகின்றது.

III

‘முருகு’ என்னும் சொல்லுக்குத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று நான்கு பொருள்களைத் தந்துள்ளார். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் “சேயோன் மேய மைவரை உலகம்’ என்று குறிப்பிடும். சேய்’ என்பது சிவ பரம்பொருளின் மகவாய் உள்ள முருகனைக் குறிக்கும். அல்லது அழிந்து நல்லது நிலை பெற-சூரன் வதைபட்டுத் தேவர் குலம் உய்யத் துணை யாய்-முழுமுதற் ஆகாரணமாய் நின்றவன் முருகப் பெருமான் ஆவான். அவனைத் தமிழ்க் கடவுள் என்றும் பண்டையோர் பாராட்டினர். நூலறி புலவ’ என்று முருகப்பெருமானை நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப் படையில் பாராட்டுவர். புலவர் ஏறாக விளங்கும் முருகன் விரும்பியுறைகின்ற இடங்கள் ஆறு என்று சுட்டப்பெறும். ஆறுபடை வீடுகள் என வழங்கப்படும் திருத்தலங்கள்பரங்குன்று என்னும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம் என்னும் சுவாமிமலை, குன்று தோறாடல் என்னும் திருத்தணி, பழமுதிர்சோலை எனனும் அழகர்கோயில் மலை முகடு என்பனவே அவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/26&oldid=586875" இலிருந்து மீள்விக்கப்பட்டது