*...tary. 27
வியாச முனிவர், விசுவாமித்திரர் வாக்காக, “எவரா யிருப்பினும் கார்த்திகேயனிடத்தில் பக்தி பண்ணுபவர் புதல்வன் முதலிய பல பேறுகளைப் பெறுவர்” என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம்.
முன்னாளில் பெரியோர் முருகனைப் பற்றிய தொல் தமிழ் நூலாம் திருமுருகாற்றுப்படையினைப் பாராயண நூலாகக் கொண்டிருந்தனர்
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுரு காற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல்
திருமுருகாற்றுப் படையின் அடியிற் காணும் இவ் வெண்பா முருக பூசை செய்யும் முறையினைக் கிளத்து
கின்றது.
■ ■ 睡 轟 藝 ■ 睡 軒 軒 யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே. (பரிபாடல் 78-81) என்னும் பரிபாடற் பகுதி அந்நாளில் திருப்பரங்குன்றம் செல்லும் திருமுருக அடியார்கள், திருமுருகன்பால் வேண்டு வனவற்றை விளம்பி நிற்கின்றது.
வாழ்க்கைக்குப் பொருள் தேவை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றும், “செய்க பொருளை, செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரியதில்’ என்றும் வள்ளுவர் குறிப்பிடுவார். ஆனால் அந்தப் பொருளையே வேண்டா என்று கூறுவதோடு அமையாது, ‘பொன்னினாகும் பொருபடை’ என்ற சிந்தாமணித்தொடரினின்றும்