பக்கம்:அறநெறி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அறநெறி

செல்வர்கள் வீட்டில் ஒவ்வொரு வேளை உண்டியினை ஏற்றுப் படிப்பினை முடிப்பதனையும், அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் உண்டி வயிறு புடைக்க உண்ணும் உண்டியாக இல்லாமல் அளவாக இருந்த காரணத்தினால் அவர்கள் உடம்பு மெலிந்து இருந்ததென்றும் குறுந்தொகைப் புலவர் படுமரத்து மோசிகீரன் குறிப்பிடுகின்றார்.

அன்னாய் இவன்ஒர் இளமா ணாக்கன் தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ இரந்துரண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே

(குறுந்தொகை 33)

அடுத்து, புறநானூற்றுப் பாடலொன்று கல்வியின் இன்றியமையாமையினையும், கல்வி கற்றார் பெறும் சிறப்பினையும் புலப்படுத்தும். ஒரு குடும்பத்தில் பலர் பிறந்திருந்தாலும், அக்குடும்பத்தில் வயதால் மூத்தவ னுக்குத்தான் தனிச் சிறப்பு, மரியாதை என்னாது, ஒரு நாட்டின் அரசன், அக்குடும்பத்திற் பிறந்த பலருள்ளும் கற்றவனையே அழைத்து மதிப்புத் தந்து, அவன் சொன்ன அறிவுரைப்படியே தன் அரசாட்சியைச் செலுத்துவான் என்று ஆரியப்படை கடத்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பினை உள்ளவாறே உணர்த்தி நிற்கக் காணலாம். பாடல் வருமாறு :

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் கன்றே பிறப்பு ர் அன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலாய் தாயும் மனம்திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/32&oldid=586885" இலிருந்து மீள்விக்கப்பட்டது