பக்கம்:அறநெறி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறநெறி

பொருள் கூறப்படுகின்றது. இதன் உண்மையான

வடிவம்,

பாஷை ஏறினும் ஏடது கைவிடேல் என்று இலக்கணத் த ா த் தா மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுவார் கள். அதாவது ஒருவர் தாம் பயின்ற மொழியில் எவ்வளவு தான் முற்றிய புலமை பெற்றவராக இருந்தாலும், மொழித்திறனை முட்டறுத்தவராக இருந்தாலும், இனி நாம் படித்துத் தெரிந்துகொள்வதற்கு ஒரு பொருளும் இல்லை. படிப்பதற்கு ஒரு நூலும் இல்லை என்று தருக்கி வாளாவிருந்து விடக்கூடாது. மொழியைச் சிறப்பாகக் கற்ற நிலை வந்துவிட்டதாக ஒருவர் கருதிவிட்டாலுங்கூட, கையில் நூலெடுத்துப் படிப்பதை விட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருளாகும்.

பதினேழாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் புலவராக குமரகுருபரர் தாம் இயற்றிய நீதிநெறி விளக்கத் தில் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒர் அருமையான கருத்தினை வெளிப்படுத்துகின்றார். வாழ்க்கைக்குப் பொருட்செல்வம் கல்விச் செல்வம் ஆகிய இரண்டுமே தேவை. கல்விச் செல்வத்தை வற்புறுத்திய கிருவள்ளுவர்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லா கியாங்கு -திருக்குறள் 247 என்றும்,

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூறிய துஇல் திருக்குறள் 759 என்று குறிப்பிடும் திருக்குறள்கள் செல்வத்தின் இன் றியமையாமையினைப் புலப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/34&oldid=586887" இலிருந்து மீள்விக்கப்பட்டது