பக்கம்:அறநெறி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அறநெறி

உண்ண உணவு. உடுக்க உடை, இருக்க இடம் என்ற மனிதனின் மூன்று இன்றியமையாத் தேவைகள் முதற்கண் வாய்க்க வேண்டும். இம் மூன்றும் வாய்த்த பிறகு-பொருட்செல்வத்தால் இம்மூன்றும் ஒருவர் வாழ்வில் அமைந்த பிறகு கல்விச் செல்வம் வந்து சேர வேண்டும். கல்வி வந்து ஒருவர் வாழ்வில் இயைந்த பிறகே அவர் மழு மனிதராகிறார். கல்விதான் ஒரு மனிதரை நிறையுடையவராக்குகிறது. கல்வி இல்லை என்றால் அவர் குறையுடைய பிறவியே.

“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. சின்னஞ்சிறு வயதில் பிஞ்சு மனத்தில் ஏற்றுக்கொள்ளும் கல்வி கல்லில் பொறித்த எழுத்தாகக் கணக்கற்ற காலம் நிலைத்து நிற்கும். எனவே மக்கட் செ ல் வங்க ளு க் கு ஒருவர் கல்வியையே செல்வமெனக் கருதி அதனைத் தர வேண்டும். நாலடியார் என்னும் சமண சமய நீதிநூல், கல்வியைக் கள்வராற் கவர முடியாது; தகுதியான ஒருவருக்குச் சொல்லிக்கொடுத்தால் அம்மாணவர் தமக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் பெயரை விளங்க வைப்பார். கல்வி கற்றவர் மாட்டு அரசனே ஒருகாற் சினங்கொண்டா லும், அவரிடமிருந்து எதைப் பறிமுதல் செய்தாலும், அவர் சிறுகச் சிறுகக் கற்றுச் சேர்த்திருக்கும் கல்வியைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்க முடியாது; அதனால் எப்பொழுதும் எஞ்சி நிற்பது: க ைர ய | ம ல் விளங்குவது கல்வியேயாகும். எனவே அக்கல்வியினையே ஒவ்வொருவரும் தத்தம் மக்கட்குச் செல்வமென எண்ணிச் சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிடு கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/36&oldid=586890" இலிருந்து மீள்விக்கப்பட்டது