பக்கம்:அறநெறி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அறநெறி

கருதினார்கள். இதையொட்டியே பதினாறு ஆண்டுகள் வளமாக வாழ்ந்தவர்களும் இல்லை; பதினாறு ஆண்டுகள் வறுமையில் தாழ்ந்தவர்களும் இல்லை என்பர். ஆனால் கல்விச்செல்வம் அத்தகையதன்று. அது எப்போதும் ஒருவரிடம் நிலைத்து நிற்பதாகும். அதனால்தான் பொருட்செல்வம் மிகவுடைய மன்னனுக்குத் தன்னுடைய ஆணை செல்லும் தன்னுடைய நாட்டில் மட்டுமே சிறப்பு: ஆனால் கற்றவர்க்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு வந்து சேரும் என்று ஒளவையார் மூதுரை என்னும் நூலில் குறிப்பிடுவர்.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேசமல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு -மூதுரை 26

இந்த உண்மையினைப் பழந்தமிழக நிகழ்ச்சிகளி லேயே காணலாம். அறிவிற் சிறந்த ஒளவைபிராட்டி நெடுநாள் வாழவைக்கும் அரிய நெல்லிக்கனியினை அதியமானிடமிருந்து பரிசாகப் பெற்றார். “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று படித்தவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் விறோடு விளங்கினர். தொண்டைமானிடம் தூது சென்று தம் நாவன்மையால் போரை நிறுத்திய திறலுடன் ஒளவையார் காட்சி தருகிறார். புல்லாற்றுார் எயிற்றியனார், கோவூர்கிழார் முதலான புலவர்கள் போரிட முனைந்த இருபெரு வேந்தரிடையிலும் சென்று சந்து செய்வித்துப் போரைத் தவிர்த்தார்கள் என்பதைப் பார்க்கிறோம். பாண்டியன் தலையானங்கானத்து நெடுஞ்செழியன் வ ஞ் சி ன ம் கூறுகின்றபொழுதுங்கூட, நான் என் பகைவரைப் போரில் வெல்ல முடியாமல் தோற்க நேரிட்டால், மாங்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/38&oldid=586912" இலிருந்து மீள்விக்கப்பட்டது