பக்கம்:அறநெறி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மருதனாரைத் தலைமையாகக் கொண்ட புலவர் அவை அன்னைப் பாடாது ஒழியட்டும் என்று கூறியதைக் காண்கிறோம்.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை புறம் : 72

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர் பாடலாகத் தனிப் பாடல் திரட்டில் ஒரு பாடல் காணப்படுகிறது. அப் பாடலில், எந்த மரக்கிளையும் குரங்கை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதுபோல, எந்த அரசரும் என்னை ஏற்றுக்கொள்வர் என்று எக்காளத்துடன் முழங்கி யிருப்பதனைக் காணலாம்.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை யோதினேன்-என்னை விரைந்தேற்றுக் கொள்ளாதவேந்தனுண்டோ வுண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு

(பி. இரத்தினநாயகர் சன்ஸ்; தனிப்பாடல் திரட்டு:

முதற்பாகம், ப. 84)

இனி, நிகழ்காலத்திற்கு வருவோம். எந்தத் துறையிற் பெருமை பெற்றவர்களாக இருப்பினும் அவர்கள் தாம் கற்ற கல்வியால், அதன் பயனாய் எழுதிய நூல்களால் புகழ் ஒளிர நிற்கிறார்கள். உலக வரறாறுகளை உருவாக்கியதும், மாற்றியமைத்ததும் சில சில நூல்களே என்பர். காரல்மார்க்ஸின் ‘தாஸ் காபிடல் என்ற ஒப்பற்ற பெருநூல் ஒரு புத்துலகத்தை உருவாக்கிய

அ.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/39&oldid=586913" இலிருந்து மீள்விக்கப்பட்டது