பக்கம்:அறநெறி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 39

மேலும் அறிவைப் பரப்பும் நூல்கள் மனவிருளைப் போக்குகின்றன. புறவிருளைப் போக்கும் கதிரவன் போல் அகவிருளைப் போக்குவது தமிழ் என்ற கருத்தில் தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்று ஈண்டுக் கருதத்தக்கது.

ஓங்கட லிடைவங் துயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர்-ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்

-தண்டியலங்காரம்; பொருள் வேற்றுமை

மரத்தச்சன் காட்டிற்குச் செல்கிறான். மேசை, நாற்காலி, நிலைப்பேழை முதலிய கருவிகள் செய்வதற்குக் காட்டிலிருந்து மரத்தைக் கொணர்கிறான். அவை ஒரே நேராக அளவில் இருப்பதில்லை. கோணல் மாணலான மரத்தை நேரான சட்டங்களாகக் கரிக் குழம்பில் நூலைத் தோய்த்துக் கோடு அடித்துக்கொண்டு, கோட்டின் வழியே வாள்கொண்டு அறுத்து, நல்ல சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறான் அதுபோல, கோணலான மனத்தினை நல்ல நூலொன்று ஒழுங்குபடுத்த முடியும் என்கிறார் பவணந்தி முனிவர்,

உரத்தின் வளம்பெருக்கி புள்ளிய தீமைப்

புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின்

கனக்கோட்டங் தீர்க்குநூ ல:தேபோன் மாந்தர்

மனக்கோட்டங் தீர்க்குநூன் மாண்பு

- நன்னூல், பொதுப்பாயிரம் 24

எனவே அறிவைப் பெருக்கிக்கொள்ள அறியாமையை அகற்றிக்கொள்ள ஒ து .ே வா ம், ஓதிக்கொண்டே இருப்போம்; ஓதுவது ஒழியோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/41&oldid=586917" இலிருந்து மீள்விக்கப்பட்டது