பக்கம்:அறநெறி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5A. Mrs. 4 o

மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் உச்சியாக ஒளிர்கின்றது. “தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை” செய்ந்நன்றியறிதல் என்பர் பரிமேலழகர். மனக்குடவர் மேலும் ஒருபடி மேற்சென்று “பிறர் செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை’ என்பர்.

“நன்றி எனப்படுவது இதயத்தின் நினைவு” (Gratitude is the memory of the heart) arsāra. மேற்புற அறிஞர் ஒருவரும் (Massieu) குறிப்பிடுவர். சர் ராபர்ட் வால்போல் என்னும் அறிஞர், “எதிர்கால நன்மைக்கு நிகழ்காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத் glos Galajarðth” (Gratitude is a lively sense of future favours) என்று குறிப்பிடுவர்.

தமிழ்நாட்டு நீதி நூலார் நன்றியுடைமையின் இன்றியமையாமையினை நாள்தோறும் நாம் கானும் காட்சியினை வைத்தே அறிவுறுத்தியிருக்கக் காணலாம்.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் அடியில்-வேரில் தண்ணிர் ஊற்றுகிறான். தென்னங்கன்று வளர்கிறது. எருவிடுகிறான். மேலும் ந ன் ற ா க வளர்கிறது. இப்பொழுது நீண்ட மரமாக உயர்ந்து விட்டது. தென்னங்குலை தள்ளிவிட்டது. தென்னை முற்றியவுடன் மனிதன் இளநீரைப் பறித்து அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகிறான். தீஞ்சுவையாக இனிக்கிறது. மனிதன் தென்னைக்குப் பாய்ச்சியதோ எளிய தண்ணிர்தான்; ஆனால் அது வளர்ந்து தருவதோ தீஞ்சுவை மிக்க

இளநீர்.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா-கின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/43&oldid=586920" இலிருந்து மீள்விக்கப்பட்டது