பக்கம்:அறநெறி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அறநெறி

தளரா வளர்தெங்கு தாள்.உண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்

என்று வாக்குண்டாம் இச் செய்தியைப் பாடிற்று.

அறங்களை நாளும் நாடிச் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறியாகும். மாறாக அறங்களை ஆற்றாமற் சிதைத்தல் அடாத செயலாகும். அதிலும் பெரிய அறங்களைச் சிதைத்தல் என்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும். ஒருவன் பேரறங்களைச் சிதைத் தாலுங்கூட, பாவம் என்னும் ஆழ் நரகிலிருந்து மீண்டு விடலாம். ஆனால் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு எவ்வகையிற் பார்த்தாலும் பாவத்திலிருந்து நீங்கும் தன்மை என்பது உண்டாகாது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும் பாவங் களாகக் கருதப் பட்டனவாகப் புறநானூற்றுப் பாடலொன்று (34) பின்வரும் பாவங்களைக் குறிப்பிடு கின்றது. பசுவின் மடியை அறுத்தல், மகளிர் தம் கருச் சிதைத்தல், பெருமுது குரவரைப் பிழைத்தல் என்பனவாம்

அவை,

ஆன்முலை அறுத்த அறணி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ

-புறநானூறு; 34:1-7

இப்பாட்டால் திருக்குறளுக்கு அ றம்” என்றொரு பெயரும் வழங்கியிருக்குமோ என்பதும் புலனாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/44&oldid=586921" இலிருந்து மீள்விக்கப்பட்டது