&#. L/7• 45
அந்த இலட்சியத்தை-குறிக்கோளை அடைகிற வழி முறைகளும் து.ாயனவாய் உயர்வுடையனவாய் இருக்க வேண்டும்” என்பர். இதனை ஆங்கிலத்தில் “Mean should justify the ends” arsity (5 soul? --L-mto.
இன்று வேகமும், பரபரப்பும், போட்டியும் நிறைந்த இந்த உலகத்தில் எப்படியும் இலட்சியங்களை அடைந்து விட வேண்டும் என்றே பலரும் துடிக்கின்றனர். அந்த இலட்சியத்தை நேர்வழியில்-நேரிய வழியில் அடைய முடியாதநிலை ஏற்படுகின்ற பொழுது, குறுக்கு வழியிற் சென்றாவது மேற்கொண்ட இலட்சியத்தை அடைந்து திர வேண்டும் என்று ஆரா வேட்கை கொள்கின்றனர்.
நம் பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத் தினையே கருத்திற் கொள்வோம். அண்ணல் காந் தியடிகள் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல், இன்னா செய்யாமைஅதாவது அகிம்சை நெறியில் நின்றுபோராடி, ஆங்கிலேய ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாடுபட்டார். அ தற்கு மாறாக வேறு சில தலைவர்கள் பலாத்காரத்தில் நம்பிக்கை வைத்து, ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து, துப்பாக்கி முனையில் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வகையில் தம் முயற்சியையும் மேற் கொண்டனர். பின்னவரின் நோக்கம்-இலட்சியம்குறிக்கோள்-நல்லதுதான். ஆனால் அந்த இனிய இலட்சியத்தை அடைய அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்தாம் நடுவுநிலைமை என்னும் நற்பண்புப் பாதையினின்று நீங்கியவைகள் ஆகும்.
நடுவுநிலைமை என்றால் என்ன? பகைவர் தெரிந்தவர், நட்பினர் என்னும் மூவரிடத்தும் அறத்தின் விழுவாது ஒப்ப நிற்கும் தன்மையாகும். மணக்குடவர்