பக்கம்:அறநெறி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அடக்க முடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினுTஉங் கில்லை உயிர்க்கு (122)

ஐம்பெரும் பூதங்கள்வழி உலகம் இயங்குவதுபோல் ஐம்புலன்கள்வழி மனிதன் இயங்குகின்றான். “ஐம்புல வேடரால் ஆட்பட்டு” என்பது ஆன்றோர் அருளிய அருள் வாக்கு. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன் களும் மனிதனை இயக்குகின்றன. இவற்றின் கருவியாக மனிதன் அமைந்து விடுவானேயானால் அது துன்பமாக முடியும். இவ்வைம்பொறிகள் வழி மனிதன் இயங்காமல் இவ்வைம் பொறிகளையும் அவன் இயக்கிச் செல்லுதல் வேண்டும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் கருவிகளாகும்; மனிதனின் உறுப்புகளாகும். உறுப்புகளை இயக்க வேண்டியது-உறுப்பியின்அதாவது மனிதனின் கடமையாக இருக்க, மாறாக அம் மனிதன் அவ்வுறுப்புகளினால் இயக்கப் பெற்றால் நிலைமை தலை கீழாகத்தானே மாறும்?

“அறிவுவழிச் செல்கிறவனுக்கு வாழ்க்கை ஒர் இன்ப நாடகம்; உணர்ச்சி வழிச் செல்பவனுக்கு அஃதோர் அவல நாடகம்” என்றார் அறிவுமேதை வால்டேர். அறிவுக்கும் உணர்ச்சிக்கும் எப்போதும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. அறிவு வென்றால் மனிதன் ஆக்கம் பெறுகிறான். மாறாக உணர்ச்சி வென்றால் மனிதன் சீரழிந்து போகிறான். உணர்ச்சி என்னும் மதம் பிடித்த யானை தன் போக்கிற் போகாமல், அறிவு என்னும் அங்குசத்தால் மனிதன் தன் வயப்படுத்திப் பணி கொள்ளுவது போல, மனம், மொழி, மெய் மூன்றும் தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/50&oldid=586931" இலிருந்து மீள்விக்கப்பட்டது