பக்கம்:அறநெறி.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.பா. 5 I

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் கடலை யில்லோம்; ஏமாப்போம், பிணியறியோம் பணிவோ மல்லோம்;

இன்பமே எங்காளும் துன்பமில்லை

மறுமாற்றத்திருத்தாண்டகம் : 1 என முழங்க வைத்தது.

“தன்னைத்தான் தாழ்த்திக் கொள்பவன் எவனோ, அவனே பிறரால் உயர்த்தப்படுவான்” என்று ஏசுநாதர் கூறுவார் :

......And he that humbleth himself

shall be exalted

Luke 18 : 24

எனவே அடக்கத்தை ஒர் ஒப்பற்ற பொருளாகக் கருதி-உறிதிப் பொருளாகக் கொண்டு ஒவ்வொருவரும் போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைக் காட்டி லும் மேம்பட்ட ஆக்கம் உயிர்களுக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இவ்வாறு உணர்ந்தால் அவ்வடக்க முடைமை காரணமாக ஒருவன் வாழ்க்கையில் உயர்வ தென்பது உறுதி; புகழ் பெறுவதென்பது அதனினும் உறுதி; வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதென்பது உறுதியினும் உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/53&oldid=586935" இருந்து மீள்விக்கப்பட்டது