பக்கம்:அறநெறி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அறநெறி

பிறரை மிதித்து நடக்கின்றனர். இந்த இருவகை மனிதர் களில் பிறரிடம் மதிப்புக் குறைவாக நடப்பவர்கள் ஒன்றை உற்று நோக்க வேண்டும். உயிரினங்களில் அற்ப உயிரினம் ஈயாகும். ஈ என்பது ஒரெழுத்தொருமொழி. ஈயென இளிக்காதே என்று நாட்டு வழக்கில் ஒரு சொல்லும் உண்டு கொல்லன் உலைக்களத்தில் ஈக்கென்ன வேலை? என்ற பழமொழியும் உண்டு. மிகக் கேவலமாக எவராலும் மதிக்கப்படுகிற ஈ. மிகப் புனிதமாக நினைக்கத்தக்க, ஏன் வணங்கத்தக்க தகுதியினையும் உடைய ஒரு முற்றும் துறந்த முனிவரின் உடம்பு முழுவதிலும் உட்காரக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது ஈ பொதுவாகத் துய்மையான பொருள்களில்தான் எப்போதும் போய் அமரும் என்று சொல்ல முடியாது எது தூய்மையான பொருள், எது தூய்மையற்ற பொருள் என்றுங்கூட வேறுபாட்டினைக் காணக் கூடிய திறம் ஈக்குக் கிடையாது. எனவே தூய்மையற்ற பொருளில் உட்கார்ந்து விட்ட நிலையினை யடுத்து, அந்த ஈ, தூய்மைக்கே நிலைக்களனாக உள்ள ஒரு புனிதமான பொருளிலும் சென்று அமரலாம். அதனைத் தடுத்துவிட முடியாது. ஆக, வாழ்க்கையில் அனைவரா லும் அற்பமாகக் கருதக்கூடிய ஈ கூட, ஒரு புனிதமான மனிதரின் உடம்பில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் போய் அமர்ந்து பின் அவரின் தலையிலேயே கூடப் போய்த்தங்கி விடும் ஆற்றலினையும் பெற்றிருத்தலைக் காணும்பொழுது, தம்மையொத்த மக்கள் தம்மை மதியாது நடத்தலை ஒரு குற்றமாகக் கருதிவிடக்கூடாது. அவ்வாறு கருதிவிடுவதே தவறுஎன்கிற நிலையில் அதற்காக-தம்மை மதிக்கவில்லை என்ற ஒரே காரணத் திற்காக அவர்கள் மீது சினங்கொண்டு விடுதலாகாது என்கிறது நாலடியார்ப் பாட்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/56&oldid=586939" இருந்து மீள்விக்கப்பட்டது