பக்கம்:அறநெறி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. - 55

நெருப்பிலே தோய்த்தெடுத்தது போன்ற தீமை யினையே ஒருவர் செய்யினும் அவ்ரிடத்துச் சினங் கொள்ளக் கூடாது என்ற பொருளில் வள்ளுவப் பெருந்

தகை,

இணர்னரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை கன்று

-திருக்குறள்: 308 என்று குறிப்பிடுகின்றார். தன்னுடைய கோபம் செல்லு மிடத்தில், வெல்லுமிடத்தில் காப்பவனே சிறந்தவன்; தன் கோபம் வெற்றி பெறாவிடத்தில் கோபத்தை அடக்கிக் கொள்பவனைப் பாராட்டுவது எற்றுக்கு?

எனவே நாலடியார்ப் பாட்டு, நாம் அன்றாட வாழ்விற் காணும் ஒர் ஈயின் வாழ்க்கையினை எடுத்துக் காட்டி. அந்த ஈ, ஒரு மனிதனின் எந்த உறுப்பில் போய் உட்கார்ந்து, தலையிற் போய்த் தங்கினும் ஒருவன் அந்த ஈயினைக் கோபித்துச் செயலொன்றும் மேற்கொள்ளாமல் வாளாயிருத்தல் போலவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை மதியாது மிதித்து, நடப்பவராயிருந்தாலும் அவரிடத்தில் கோபங்கொள்ளாது இருத்தலே வாழும் நெறி என்று புலப்படுத்தி நிற்கிறது.

மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை கன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/57&oldid=586941" இலிருந்து மீள்விக்கப்பட்டது