உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறநெறி

2. கல்வி

இம்மை பயக்குமால், ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால், தாம் உளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாம் காணோம்; கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து.

-நாலடியார்; கல்வி: 2 (132)

“அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் அறிவிற் சிறந்த :ஒளவை பிராட்டியார். மனிதப் பிறவி மதிக்கப்படுவதற்கே காரணம் அப்பிறவி ஆறறிவு வாய்த் திருப்பதுதான். நல்லது இது, கெட்டது இது என்று பகுத்தறிகின்ற பகுத்தறிவு மனிதப் பிறவிக்கே வாய்த் திருக்கின்றது. ஆறறிவு உடைய உயிர்க் குலத்தை மக்கள் என்றும் ஆறறிவிற்குக் குறைந்த உயிரினங்களை மாக்கள் என்றும் வழங்கும் வழக்கு தமிழில் உண்டு.

கல்வி என்ற ஒன்றே மனிதனை முழுமையுடைய எனாக்குகின்றது. இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் எண்ணும் எழுத்தும் கண்கள் என்பர் வள்ளுவர். ‘கண்ணுடையவர் என்பவர் கற்றோர் என்பதும் அவர் வாக்கு. ஒருவன் பெறக்கூடிய செல்வங்களில் கெடு தலில்லாத் தலையாய செல்வம் கல்வி; மற்றச் செல்வங்க ளெல்லாம் செல்வங்களென்று போற்றப்பட மாட்டா என்னும் கருத்தில் திருவள்ளுவர் பெருமான்,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை

-(குறள் 400) என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/58&oldid=586942" இலிருந்து மீள்விக்கப்பட்டது