பக்கம்:அறநெறி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.asp, 57

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றைவேந்தனும்,

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

என்று உலகநீதியும் உரைத்தன. கல்’ என்ற சொல்லிற்கே தோண்டுதல் என்று பொருள் கூறுவர். அறியாமை என்னும் இருளை அகத்திலிருந்து அகற்றி அறிவு என்னும் ஒளியை அகத்தில் பாய்ச்சுவதற்குக் கல்வி தேவை. கல்வியில்லாத பெண்களைக் களர் நிலம்’ என்பர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழ்நாடு தொன்னெடுங்காலத்திலேயே அறிவிற்சிறந்த ஆன்றோர் பெருமக்களைப் புலவர்களாகப் பெற்றிருந்தது. எனவே தான் சங்ககாலம் என்னும் தமிழின் பொற்காலத்தில் புலவர் பெருமக்கள் மிகப் பலர் வாழ்ந்து எண்ணற்ற பாடல்களை இயற்றிச் சென்றுள்ளனர். இது குறித்தே தான் பாட்டுக்கொரு புலவன் என்று நாட்டு மக்களால் நலமுறப் போற்றப்பெறும் மகாகவி பாரதியாரும் தமிழ் நாட்டைக் “கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்றார்.

கல்லார் கெஞ்சில் நில்லார் ஈசன்

என்றும் ஆன்றோர் அருளியுள்ளனர். எனவேதான் நறுந்தொகை என்னும் நற்றமிழ் நூல்,

கற்கை கன்றே கற்கை கன்றே

பிச்சை புகினும் கற்கை கன்றே என்று கூறிற்று. பதினேழாம் நூற்றாண்டின் இணையிலாப் புலவரான குமரகுருபரர் சிற்றுயிர்க்குற்ற துணை கல்வி யைக் காட்டிலும் பிறிதொன்றில்லை; ஏனெனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/59&oldid=586943" இலிருந்து மீள்விக்கப்பட்டது