பக்கம்:அறநெறி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அறநெறி

அஃதொன்றே அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்’ என்றார்.

நாலடியார்ப் பாடலும் கல்வியினைப் போல் அறியா மையினை அறுக்கும் நன்மருந்து வேறொன்றும் இல்லை என்ற பொருளில் கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து எம்ம்ை உலகத்தும் யாம் காணோம்’ என்றார். எந்த வுலகத்திலும் காணமுடியாத அளவிற்குக் கல்வி என்னும் அருமருந்து அமைந்திருப்பதற்கு அதனிடத்துக் காணப் படும்சிறப்புகள் யாவை? அவற்றை நாம் கண்டறிய வேண்டாமா?

முதற்கண் மனிதன் இப்பிறவியில் அடைவதற்குரிய இன்பங்களைக் கொடுக்கும். அக்கல்விச் செல்வமானது கிள்ளக் கிள்ளவும் குறையாது; அள்ள அள்ளவும் வற்றாது. பிறர்க்குக் கொடுத்தலினால் செல்வம் குறைந்து போகும்; ஆனால்கல்விச் செல்வம் குறைவுபடாது; மேலும் கல்வியுடையவர் புகழ் கடல் கடந்தும் சென்று நெடுந் தூரம் நிலைத்து நிற்கும். அக்கல்வி கற்றவர் உயிரோடி ருக்கும் வரையிலும் ஒரு நாளும் அழியாது என்று கூறிக் கல்வியின் சிறப்பினைக் கவினுறப் போற்றுகின்றது நாலடியார். இக் கருத்தினையே வேறொரு வகையில் விளக்கமுறும்வண்ணம் மற்றொரு நாலடியார்ப் பாடல் நவிலுகிறது கல்வி ஒருவர் வைத்துள்ள இடத்திலிருந்தும். பிறரால் கைக்கொள்ளப்படமாட்டாது; தகுதியுடைய மாணாக்கனுக்குக் கொடுத்தால் ஒருநாளும் குறையாது; மிகுந்த சிறப்பினையுடைய அரசர் கோபித்துக் கொண்டாலும் கல்வியைப் பறிமுதல் செய்ய இயலாது; ஆதலால் ஒருவன் தன் மக்களுக்குத் தன் காலத்திற்கு எஞ்சி நிற்கும் பொருளாகச் செய்யத் தகுவன இக்கல்வியே யாகும் என்கிறது அப்பாடல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/60&oldid=586946" இலிருந்து மீள்விக்கப்பட்டது