3.t mrs. 59
வைப்புறிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்; எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற -நாலடியார் 134
எனவே கல்வி என்பதன் இன் றியமையாமையை வற்புறுத்தாத நூல் இல்லை. “கல்வி கற்கையில் கசப்பு; கற்றபின் இனிப்பு” என்று கூ றி இளைஞர்களை ஊக்கு விக்கும் நிலையினையும் காணலாம். கடிதாயிருக்கு மிப் போது:கல்வி வேளைதோறும் சென்று கற்பதால் படியும் அப்போது” என்பார் பாவேந்தர். எனவே கல்வி என்னும் பேறு வாய்த்தவர் வழியேதான் அரசனும் நடப்பான் என்பைைன “அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” என்று புறநானூறு கூறும். “எக்குடியிற் பிறந்து யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர்” என்பதும், “மன்னர்க்குத் தன்தேசமல்லால் சிறப்பில்லை; கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்பதும் பொருள் மொழிகளன்றோ. இதனாலன்றோ புறநானூற்று புலவர் ஒருவர் நெஞ்சார்ந்த பெருமிதத்துடன் “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்றார். இதனையே குறள் தந்த கோமான்,
யாதானும் காடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (குறள் 397) என்றார். அந்தக் கரு த்திலேதான் நாலடியாரும்,
இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால் தம்மை விளக்குமால், தாம் உளராக் கேடின்றால் எம்மை உலகத்தும் யாம்காணோம்: கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து என்றது.